பல்வேறு இன்னல்களை கடந்து துபாயிலிருந்து சென்னைக்கு வந்தது நிவாரண பொருட்கள்.பல்வேறு  இன்னல்களை  கடந்து  துபாயிலிருந்து சென்னைக்கு நேற்று இரவு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மூலம் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு  உதவிய  அனைத்து  நல்ல  உள்ளங்களுக்கும் , முக்கியமாக  இதை  கொண்டுசெல்ல உதவிய சில நேர்மையான  இந்திய தூதரகம் ,சுங்கவரி மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கும், சைலேந்திர பாபு IPS அவர்களுக்கும் நன்றிகள்.

 

பாதுகாப்பு  காரணமாக  உடன்  செல்லும்  எனது  உயிர் தோழரின் பெயரை இங்கே வெளியிடவில்லை. அவர்  இங்கிருந்து  செல்லும்  முன் ஆளுங்கட்சியிடமிருந்து பலவகையான  தொலைபேசி  அழைப்புகளும், மிரட்டல்களும்  விடுக்கப்பட்டுள்ளன.

( தங்கள் கட்சியின் மூலமே பொருட்களை வினியோகம் செய்யப்பட வேண்டுமென ).

 

அதற்கான  ஆதாரங்கள்  எங்களிடம்  உள்ளது,  அது  உரிய  இடத்தில்ஒப்படைக்கப்படவுள்ளது.

நமது  மக்கள்  பயனுற, நமக்கு துளியும் சம்பந்தமில்லாத துபாய் அரசின் எமிரேட்ஸ் விமானம் எவ்வித கட்டணமோ, வரியோ வசூலிக்காமல் 6 டன் எடையுள்ள,  13 இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை  கொண்டு சென்று உதவ முன்வந்துள்ளது,

 

ஆனால் நமது அரசோ அதற்கும் வரிவிதிக்க முயன்றது.  இடையே அரசியல்வாதிகளின் இடையூறு வேறு..  தற்போது அனைத்தையும் கடந்து வெற்றிகரமாக சென்னை விமானநிலையம் சென்றடைந்துவிட்டது.

 

எனது  தோழர் கடைசியாக  கூறிய  வார்த்தை " உண்மையில் இந்தியனாய் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்,  ஒரு உதவியை  செய்யக்கூட இவ்ளோ பிரச்சினையை சந்திக்கவேண்டியிருக்கு, பேசாம வேறு நாட்டிலேயே வசிக்கலாம் போல"  என்ற வார்த்தையில் உள்ள உண்மையை உணர்ந்தேன்.

 

கடந்த ஒருவாரமாக பகலில் அலுவலக வேலை, இரவில் தொண்டு நிறுவனங்கள்  மற்றும்  தன்னார்வலர்களிடமிருந்து பொருட்களை பெற்று  அதனை  பேக்கிங் செய்ய என முழுமையாக  தன்னை  அற்பணித்து,  தற்போது அதை வழங்க சென்னை செல்லும் தோழருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

 

நந்தகுமார்.

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.