சுயசரிதை புத்தகம் எழுதி பிரபலமான பிரான்ஸ் பிச்சைக்காரர். 

பிரான்ஸ் தலைநகர் பாரீசை சேர்ந்தவர் ஜீன்–மாரி ரவுகுல் (47). இவர் பாரீஸ் நகர வீதிகளிலும், பூங்காக்களிலும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு வீடு கிடையாது.
இதனால் பிளாட் பாரத்தில் தங்கியுள்ளார்.

 

கடந்த 25 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார். இதன் மூலம் தினமும் அவர் 80 ‘யூரோ’ (ரூ.650) சம்பாதிக்கிறார். இதன் மூலம் தனது உணவு, உடை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தனது வாழ்க்கையை சுயசரிதை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

 

அது அதிக விற்பனையாகி பிரான்சை கலக்கி வருகிறது. இதன் மூலம் இன்று அவர் பிரபலமாகி விட்டார்.

 

அவர் குறித்து ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ போன்ற இணைய தளங்களில் அவரது போட்டோவுடன் செய்திகளும், வாழ்த்துகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

 

சுற்றுலா வரும் வெளிநாட்டினரும் இவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். அவரது புத்தகங்களை ஆர்டர் செய்து வாங்கி செல்கின்றனர். இருந்தும் ஜீன்–மாரி–ரவுகுல் தனது தொழிலை மாற்றவில்லை.

 

தொடர்ந்து பிச்சை எடுத்து வருகிறார். தற்போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.