முத்துப் பேட்டை அருகே ஆதரவின்றி தவித்த மாற்றுத் திறனாளி சிறுமி மீட்டு காப்பகத்தில் சேர்ப்பு. படங்கள் இணைப்பு.முத்துப் பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள்(45). கூலி தொழிலாளி. இவரது கணவர் முருகதாஸ், 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்கள் மகள் பாரதி(17). பிறவிலேயே மாற்றுத் திறனாளியான இவர் பிறந்தது முதல் படுத்த படுக்கையாக இருந்தார். இவருக்கு பேசவோ, நடக்கவோ முடியாது. தாயின் உதவியின்றி எதையும் செய்ய முடியாது. மாரியம்மாள் கூலி வேலை செய்து மகளை காப்பாற்றி வந்தார்.

இவர்கள் குடிசையில் வசித்து வந்தனர். இந் நிலையில் மாரியம்மாளுக்கு சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப் பட்டது. இதனால் பட்டுக் கோட்டை தனியார் மருத்துவ மனையில் உறவினர் ஒருவர் துணையோடு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு உடல் நிலையில் மிகவும் மோசமாக இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் இறந்து விடுவார் என்று டாக்டர்கள் கூறினர்.

இதனால் பாரதியை அருகே வசிக்கும் பெண்கள் மனித நேயத்துடன் பராமரித்து வந்தனர். உறவினர்கள் இருந்தும் உதவியில்லாமல் தவிக்கும் பாரதியை மீட்டு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப் பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி கடந்த 11ம் தேதி தினகரனில் படத்துடன் வெளியானது. இதை படித்த தினகரன் வாசகர்கள் பலரும் பாரதிக்கு உதவ முன் வந்து தொடர்பு கொண்டனர்.

ஆனால் பாரதிக்கு அரசின் உதவியே நிரந்தரமானது, பாதுகாப்பானது. இந் நிலையில் நேற்று முன் தினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோசியா ராஜன், சைல்டு லைன் 1098 பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மாகிதாஸ், பணியாளர்கள் செந்தில் குமார், மகேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் பாரதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் காப்பகத்துக்கு கொண்டு செல்ல பாரத மாதா தொண்டு நிர்வாகி எடையூர் மணி மாறனின் கார் உதவியுடன் பாரதியை மீட்டு வேளாங்கண்ணி நிர்மலா அன்பு இல்லத்தில் சேர்த்தனர்.ஒரு சில நாட்களுக்கு பிறகு பாரதி மயிலாடுதுறையில் உள்ள அறிவகம் காப்பகத்தில் சேர்க்கப் பட உள்ளார்.

பாரதியை அதிகாரிகள் மீட்டுச் சென்ற போது கிராமமே கூடி நின்று அவரை கண் கலங்க அனுப்பி வைத்தனர். பாரதியை மீட்க உதவி செய்த தினகரனுக்கு அக் கிராம மக்கள் மிகுந்த பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோசியா ராஜன் கூறுகையில்: இது போன்று குழந்தைகள் யாரும் பரிதவித்தால் எங்களது சைல்டு லைன் 1098 எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். பாரதியை மீட்க உதவி செய்த தினகரனுக்கு நன்றி என்றார்.

தினகரன்.

மனிதநேயத்தின் மருஉருவங்கள் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை கவனிப்பாறின்றி அனாதையாய் கிடந்த குழந்தையை எடுத்துகொன்டு சென்ற நாம்கோ தொண்டு நிறுவனத்திற்க்கு நன்றி..

அதற்க்கு உறுதுணையாய் இருந்து செயல்பட்ட லயன்ஸ் கிளப் உறுப்பினர் கீழநம்தங்குறிச்சியை சேர்ந்த திரு சபாபதி மற்றும் பத்திரிகை நிருபர் திரு முகைதீன் பிச்சை அவர்களுக்கும் நெஞ்சார்ந்த

நன்றி,நன்றி,நன்றி..

புகைப்படத்தில்...மாற்றுத்திறனாளி சிறுமி, குழந்தையின் தாய்,குழந்தை வசித்தவீடு   மற்றும் நாம்கோ தொண்டு நிறுவாகிகள்.

z3

thai z1 a1 a220151213c_02010600102

 

 

 

 

 

 

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.