இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரசாரத்தினால், டாக்டர் பட்டம் பிடுங்கப்பட்டது.அமெரிக்காவில் பில்லியன் டொலர் சொத்துக்களுக்கு அதிபதியான டோனால்ட் ட்ரம்ப் என்ற தொழிலதிபர் அந்நாட்டு ஜனாதிபதி வேட்பாளராக குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வருகிறார்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகள் உடைய அவர், ஒவ்வொரு பிரசாச்சரத்தின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

சில தினங்களுக்கு பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘அமெரிக்க நாட்டிற்குள் ஒட்டுமொத்த இஸ்லாமிய நபர்களையும் அனுமதிக்க கூடாது’ என பேசியுள்ளார்.

ட்ரப்மின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஸ்கோட்லாந்தில் உள்ள Robert Gordon University (RGU) என்ற பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, தொழில்துறையில் சிறப்பாக செயல்பட்ட காரணத்திற்காக கடந்த 2010ம் ஆண்டு ட்ரம்பிற்கு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்திருந்தது.

தற்போது, அந்த கெளரவமிக்க பட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று மாலை பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் ட்ரம்பிற்கு டாக்டர் பட்டம் கொடுத்தது சரியானதாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தொடர்ந்து எதிர்த்து வருவது தங்கள் பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பிற்கு ஏற்பட்ட கலங்கமாக கருதுகிறோம்.

எனவே, ட்ரம்பிற்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்ளதாக’ அந்த அறிக்கையில் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.