சென்னை மழை பாதிப்பு. முஹம்மது ஷிப்லி முத்துப்பேட்டையில் பேட்டிமுத்துப்பேட்டைக்கு நேற்று வந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்பொழுது அவர் கூறுகையில்:

சென்னை, கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதிலும், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் இஸ்லாமிய மக்கள் முன்னணியில் இருந்தார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்களும், களத்தில் நின்ற ஊடகங்களும் சொல்கிறது. ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்பார்கள். பெரும்பான்மை முஸ்லீம்கள் ஆபத்தான நேரத்தில் வெளிபடுத்திய மனிதநேய செயல்களே அவர்களுக்குரிய உண்மையான முகம்.

சிறு கூட்டம் அல்லது மூளை சலவை செய்யப்பட்ட சில பெயர் தாங்கி முஸ்லீம்கள் செய்யும் செயல்கள் சமுதாயத்தின் உண்மையான முகமல்ல. நம்மை பிரித்தாளும் சக்திகள் அதுபோன்ற நிகழ்வுகளை பெரிதுபடுத்தி, இஸ்லாமிய மார்க்கத்தோடும், சமுதாயத்தோடும் தொடர்பு படுத்துகின்றனர்.

அவர்களின் எண்ணங்கள் தமிழகத்தில் ஜெயிக்காது. தமிழக மக்கள் பிரித்தாளும் சக்திகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டார்கள். மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், ஜாதி, மதங்கள் மறைந்து வெளிப்பட்ட மனிதநேயம் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு மிகவும் தேவையானது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மனிதநேய நிவாரண உதவிகளை செய்து வருகிறது. மருத்துவ முகாம்கள், துப்பரவு பணி போன்ற செயல்களிலும் ஜமாஅத் ஈடுபட்டு வருகிறது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை சர்வதேச விமானநிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஜமாஅத் முடிவு செய்திருந்தது.

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு விமானநிலையம் முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெற்று, அன்றைய தினத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகமான மனிதநேய நிவாரண உதவிகளை ஜமாஅத் செய்தது.

பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் ஊடகத்துறையினரும் இணைந்து பணியாற்றினர். உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை சொல்கிறேன்: டிசம்பர் 2 நள்ளிரவு 1:30 மணிக்கு கோடம்பாக்கம் லிபர்டி அருகே ஆதிதிராவிடர் அரசினர் விடுதியில் தங்கி இருந்த 11 பார்வையற்ற மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி இருப்பதை அறிந்த ஊடகவியலாளர் ஜமாஅத்திற்கு தகவல் தந்தார். பிறகு அவர்கள் மீட்கப்பட்டு திருவல்லிக்கேணி டாக்டர்.பெசன்ட் ரோட்டிலுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மஸ்ஜித்துர் ரஹ்மான் மசூதியில் தங்க வைக்கப்பட்டனர்.

திருள்ளூர் மாவட்டம் தாங்கல் பகுதியிலுள்ள இம்ரான் என்ற பள்ளி மாணவன் மீட்புபணியில் ஈடுபட்ட போது விசப்பூச்சி கடித்ததில் பாதிக்கப்பட்டு இறந்து இருக்கிறார். உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் ராணுவத்தினர் இறக்கும் போது தமிழக அரசு எப்படி நடந்து கொள்ளுமோ, அது போன்று மாணவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு பெரியதொரு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி கூறினார்.

நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை

 

a1
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.