முத்துப் பேட்டை பாமினி ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் மாயம்.முத்துப் பேட்டை  பாமினி ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் மாயமானார்.முத்துப் பேட்டை அடுத்த பெத்த வேலாண் கோட்டகத்தை சேர்ந்தவர் தொழிலாளி நாகராஜ் மகன் அருண் பாண்டியன்.

முத்துப் பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நண்பர் களான அதே பகுதியை சேர்ந்த அஜய், மணிக்கண்டன், மணிமாறன், சக்தி, அலெக்ஸ் பாண்டியன் ஆகியோருடன் பாமினி ஆற்றில் நேற்று காலை குளித்தனர்.

அப்போது திடீரென அருண் பாண்டியனை காணவில்லை. அவரை சகமாணவர்கள் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து முத்துப் பேட்டை காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.

முத்துப் பேட்டை, திருத்துறைப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து 12 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் மாணவன் கிடக்கவில்லை. திருத்துறைப் பூண்டி எம் எல் ஏ உலக நாதன், தாசில்தார் பழனிவேல், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகையன், வருவாய ஆய்வாளர் முருகேசன், ஊராட்சி தலைவர் ரவிக் குமார், திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம் ஆகியோர் பார்வையிட்டு மாணவன் அருண் பாண்டியனை தேடும் பணி களை துரிதப் படுத்தினர். இதனால் நேற்று இரவும்தேடும் பணிதொடர்ந்தது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.