முத்துப் பேட்டை சாலைகளில் சுற்றித் திரியும் கால் நடைகளை அப்புறப் படுத்த வேண்டு மென சமூக ஆர்வலர் மனு அனுப்பினார்.முத்துப் பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் குலோத்துங்கனிடம் சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் நேற்று மனு அளித்தார்.

அதில் முத்துப் பேட்டை நகர் பகுதியில் வட கிழக்கு பருவ மழை பெய்து வருவதால் அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளது.

மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகர் முழுவதும் சுற்றித் திரியும் கால் நடைகளால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

பேரூராட்சிக்கு சொந்தமான வாரச் சந்தையை அதிகமாக பெண்கள் பயன் படுத்தி வருகின்றனர். இங்கும் கால் நடைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இது தொடர்பாக பல முறை பேரூராட்சி நிர்வாகத்தில் பொது மக்களால் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை.

எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக கால் நடைகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.