முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளுக்கு வெளி நாட்டு பறவைகள் வரத்து அதிகம்.முத்துப்பேட்டை கடலோரத்தில் அடர்ந்த அலையாத்தி காடுகள் உள்ளன. இக் காட்டில் அலையாத்திமரம், கண்ணா மரம், தில்லை மரம் போன்ற சுமார் 100 வருடங்கள் ஆன பெரிய வகை மரங்கள் உள்ளன.

 

அதோடு பல வகை மூலிகை செடிகளும் உள்ளன. இக் காட்டில் நரி, காட்டுப் பன்றி, காட்டுப் பூனை, முயல் உள்ளிட்ட காட்டு விலங்குகள் உள்ளன. மேலும் பச்சைக் கிளி, பழந்தின்னி வவ்வால், மயில் போன்ற பறவைகள் உள்ளன.

 

இக் காட்டிற்கு நவம்பர் மாதத்தில் இருந்து வெளி நாட்டு பறவைகள் வரத் தொடங்கும். தற்போது அலையாத்திக் காடுகளில் சீசன் துவங்கி உள்ளதால் ஆஸ்திரேலியா, இலங்கை, சைபீரியா, ரஷ்யா, மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து கூழக்கிடா, செங்கால் நாரை, நத்தை கொத்தி நாரை, பாம்பு தாரா, பவளக்கால் உல்லான், யான சிரவி, மயில் சிரவி, பனங் கொட்டை சிரவி போன்ற நீர்ப்பறவைகள் வரத்து அதிகமாக உள்ளது. இதே போல் இமய மலை பகுதியில் இருந்தும் பறவைகள் வந்துள்ளன.

 
வெளி நாட்டு பறவைகள் தட்ப வெட்ப நிலைக்காகவும்,  இனப் பெருக்கத்திற்காகவும் நமது நாட்டு காடுகளுக்கு வருகிறது. தற்போது மாவட்டம் முத்துப்பேட்டை, அதிராம் பட்டினம் அலையாத்தி காட்டிற்கு  வெளி நாட்டு  நீர்ப் பறவைகள் ஏராளமாக வந்துள்ளது. இப் பறவைகளை பாதுகாக்க வனத் துறையினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

 

alayaththi+kadu
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.