லண்டன் சாலையில் குழந்தை பெற்ற இந்திய வம்சாவளி பெண்.இங்கிலாந்தில் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மணி ஒருவர் சாலையிலேயே குழந்தை பெற்றெடுத்தார்.

காந்தா பாவு(41) என்ற அந்த பெண்மணியும் அவரது கணவர் அமித்டும்(39) பிரசவத்திற்காக தெற்கு இங்கிலாந்தின் வாட்போர்டு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு காரில் சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே காந்தா பாவுக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. வலி தாங்கமுடியாமல் அவர் அலறினார்.

இதனையடுத்து சாலையோரத்தில் காரை நிறுத்த, காந்தா பாவு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவரது கணவர் அமித்டும் பிரசவத்திற்கு உதவி செய்துள்ளார்.

இது குறித்து குழந்தையை பெற்றெடுத்த அந்த பெண்மணி கூறுகையில், “வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போதே வலி அதிகமாக இருந்தது. சாலையில் சென்றுகொண்டிருந்த போது குழந்தை பிறந்து விட்டது. அது ஒரு பயங்கரமான தருணமாக இருந்தது. என்னுடைய கணவர் என்னுடன் இருந்தது ஆறுதலாக இருந்தது.” என்றார்.

இந்த பிரவசவத்தை காரின் பின்புறம் அமர்ந்திருந்த அவர்களின் குழந்தைகளான ராதா(7), ராதிகா(2) ஆகியோர் நேரில் பார்த்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. அந்த குழந்தைக்கு நேற்று பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ரிஷன் என்று அந்த குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.