முத்துப்பேட்டை குடியிருப்பு பகுதியில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டியதால் பரபரப்பு.முத்துப் பேட்டை சித்தேரிக் குளம் கிழக்கு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் காலனி வீடுகள் உள்ளன. நேற்று அதிகாலை அதே பகுதியில் உள்ள காலனி செப்டிக் டேங்கிலிருந்து அதன் கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் ஒரு வாகனத்தில் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன் கழிவுகளை வெளியில் எடுத்து சென்று அப்புறப் படுத்துவதற்கு பதில் அதே பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் கொட்டினர். இதை பார்த்ததும் அப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனால் துப்புரவு பணியாளர்கள் வாகனத்தை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து சின்னப்பா கூறுகையில், அடிக்கடி இப் பகுதியில் செப்டிக் டேங்க் கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் கொட்டி அசுத்தமாக்கி வருகின்றனர். இதனால் இப் பகுதி மக்களுக்கு பல்வேறு வியாதிகள் ஏற்படுகிறது. இதற்கு பேரூராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.