தீவிரவாதத்துக்கு எதிரான இஸ்லாமிய ராணுவம்: சவுதி அரேபியா அறிவிப்புஅதிகரித்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட தீவிரவாத செயல்களை முறியடிக்க 34 நாடுகளின் ராணுவ வீரர்களை கொண்ட இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்த சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.

இந்த அறிவிப்பை செய்தியாக வெளியிட்டுள்ள சவுதியின் பிரபல நாளிதழ், ‘ஊழலையும், பேரழிவையும் பாவச்செயலாக இஸ்லாம் கருதுகின்றது. அதன்படி, தீவிரவாதத்தின் மூலம் பேரழிவை உண்டாக்கும் செயலானது மனித மாண்பையும், உரிமைகளையும், மிகவும் குறிப்பாக..,வாழ்வதற்கான உரிமையையும் பாதுகாப்புக்கான உரிமையையும் மீறும் செயலாகும்.

எல்லா வகையிலும் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதாலும், இதற்கு ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் என்பதாலும் இந்த கூட்டுப்படைக்கு சவுதி அரேபியா தலைமை தாங்கும்’ என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள சவுதி நாட்டின் துணை இளவரசரும் ராணுவ மந்திரியுமான முஹம்மது பின் சல்மான், ‘தற்போது ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். எனவே, இந்த முயற்சிகளை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டியது மிகவும் அவசியம். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள உலகளாவிய தீவிரவாதத்தை முறியடிப்பதற்காக உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து எங்களது இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு போராடும்.

இந்த கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் ரியாத் நகரில் அமைக்கப்படும், இங்கிருந்தவாறு இஸ்லாமிய உலகின்மீது நடத்தப்படும் தாக்குதல்களை முறியடிக்கும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

ராணுவ பலம்மிக்க பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, லிபியா, ஏமன் உள்ளிட்ட பெரிய நாடுகளும், போகோஹரம் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியா, சோமாலியா, மாலி, சாட் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுக்ளும் இடம்பெற்றுள்ளன. சவுதியின் அண்டை நாடுகளான குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளை உள்ளடக்கிய இந்த படையில் சிரியா, ஈராக், ஈரான், ஓமன் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறவில்லை.

சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலமையிலான ஆட்சிக்கு ஆதரவாகவும், ஷியா இனத்தைச் சேர்ந்த ஹவுத்தி போராளிகளுக்கு எதிராகவும் சவுதி அரேபியா விமானப்படைகளின் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு நேரெதிராக ஏமனில் ஆட்சிக்கு எதிராக போராடிவரும் புரட்சிப்படையினருக்கு சன்னிப் பிரிவு ஆதரவு நாடான ஈரான் பக்கபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.