முத்துப் பேட்டை பைக் விபத்தில் கால் துண்டான பரிதாபம்.முத்துப் பேட்டை அடுத்த அரமங்காட்டை சேர்ந்தவர் வீரமணி (27). முத்துப் பேட்டையில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

தற்போது பெருக வாழ்ந்தான் கிராமத்தில் குடியிருந்து வருகிறார். நேற்று மாலை கடைக்கு செல்வதற்காக நண்பர்களான முத்துப் பேட்டை தெற்கு காட்டை சேர்ந்த அஜித்குமார்(23), மருதங்காவெளியை சேர்ந்த அஜய் (17) ஆகியோருடன் பைக்கில் வீரமணி சென்றார்.

கோவிலூர் கோட்டகம் அருகே வந்த போது பைக் மீது முத்துப் பேட்டையிலிருந்து மன்னார்குடி நோக்கி வந்த தனியார் பேருந்து மோதியது. இதில் பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த வீரமணியின் வலது கால் துண்டானது.

மேலும் பைக்கில் வந்த அஜித்குமார், அஜய் ஆகியோர் காயமடைந்தனர். தகவல் அறிந்ததும் முத்துப் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். விபத்தில் காயமடைந்த 3 பேரும் சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.