அமெரிக்காவின் எச்சரிக்கையால் லண்டன் - நியூயார்க் விமான சேவை ரத்து செய்தது 'குவைத் ஏர்வேஸ்'.இஸ்ரேலியர்களுக்கு டிக்கெட் வழங்க மறுத்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமெரிக்கா எச்சரித்ததால், லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு இடையேயான விமான சேவையை, 'குவைத் ஏர்வேஸ்' நிறுவனம் ரத்து செய்துள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டன் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரங்களுக்கு இடையே, விமான சேவையை, குவைத் ஏர்வேஸ் நிறுவனம் நடத்தி வந்தது. குவைத் ஏர்வேஸ் விமானத்தில், நியூயார்க்கில் இருந்து லண்டன் செல்ல டிக்கெட் வழங்கும்படி, இஸ்ரேலை சேர்ந்த எல்டாட் காட் என்பவர் கேட்டார்.

ஆனால், இஸ்ரேலைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு டிக்கெட் வழங்க, குவைத் ஏர்வேஸ் நிறுவனம் மறுத்து விட்டது. இதுபற்றி, அமெரிக்க போக்குவரத்து துறையிடம், எல்டாட் காட் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த அமெரிக்க போக்குவரத்து துறை, குவைத் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு, இந்த ஆண்டு செப்டம்பரில் அனுப்பிய கடிதத்தில், 'பயணிகளிடம் பாகுபாடு காட்டுவதை ஏற்க முடியாது.
இஸ்ரேலியர்களுக்கு டிக்கெட் வழங்க மறுத்தால், உங்கள் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை பாயும்' என, எச்சரித்திருந்தது.

இதற்கு, குவைத் ஏர்வேஸ் அனுப்பிய பதில் கடிதத்தில், 'குவைத் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே, தங்கள் நிறுவனம் நடக்கும்' என, தெரிவித்திருந்தது.

இந்நிலையில், லண்டன் - நியூயார்க் விமான சேவையை, குவைத் ஏர்வேஸ் நிறுவனம் ரத்து செய்து விட்டதாக, அமெரிக்க போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.