விமானத்தில் ஏற்ற மறுத்த விவகாரம் குறித்து விமான அமைச்சகத்திடம் கேரள கவர்னர் புகார்.கவர்னருக்காக காத்திருக்காமல் விமானம் புறப்பட்டுச் சென்ற விவகாரம் குறித்து விமான அமைச்சகத்திடம் கேரள கவர்னர் சதாசிவம் புகார் தெரிவித்துள்ளார்.

கேரள கவர்னராக சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பி.சதாசிவம் பதவி வகித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை கோழிக்கோட்டில் நடைபெற்ற விழாவில் மனைவியுடன் கலந்து கொண்ட சதாசிவம், திருவனந்தபுரம் செல்வதற்காக கொச்சி விமான நிலையத்துக்கு இரவு வந்தார். அப்போது அவரிடம், ஏர் இந்தியா விமானம் ஒன்று 11.40 மணிக்கு புறப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த விமானத்தில் ஏற சதாசிவம் தயாரானார். இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவன விமானியிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கவர்னர் விமானத்தில் செல்வதற்கான அனுமதி சீட்டும் கொடுக்கப்பட்டது.

விமானத்தில் செல்வதற்காக கவர்னர் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகளுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது விமானத்தில் பயணிகள் ஏறுவதற்காக பொருத்தப்பட்டிருந்த ஏணி திடீரென அகற்றப்பட்டு, விமானம் புறப்படுவதற்கு தயாராகி கொண்டு இருந்தது. விமானியிடம் தகவல் தெரிவித்தும், கவர்னருக்காக காத்திருக்க முடியாது என்று தெரிவித்து விட்டு, விமானத்தை அவர் ஓட்டிச்சென்று விட்டார். இதையடுத்து கொச்சியில் இரவு தங்கி விட்டு, மறுநாள் சாலைமார்க்கமாக கவர்னர் சதாசிவம் திருவனந்தபுரம் திரும்பினார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கவர்னர் சதாசிவம் புகார் அளித்து உள்ளார்.

கவர்னர் தனது புகார் கடிதத்தில், ‘நானும், எனது மனைவியும் கொச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறுவதற்காக விமான அனுமதிச்சீட்டு பெற்றிருந்தபோதும், விமானம் நிற்காமல் சென்றுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கவர்னர் வருகை குறித்து அறிவித்தும், விமானம் புறப்பட்டு சென்றது மிகப்பெரிய தவறு என்று கவர்னர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.