முத்துப்பேட்டையில் காணொலி காட்சியில் முதல்வர் திறந்த விருந்தினர் மாளிகை. கைத்தட்ட வந்த கலெக்டர் ரிப்பனை கண்டு டென்ஷன்.முத்துப் பேட்டையில் வீடியோ கான்பரன்சிங்கில் முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்த அரசு விருந்தினர் மாளிகையில் ரிப்பன் கட்டி வைத்திருந்ததால் கலெக்டர் டென்ஷன் ஆனார்.

சென்னையில் முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறக்கும் எந்த திட்டத்தையும் உள்ளூரில் இருக்கும் அமைச்சரோ, கலெக்டரோ கைத் தட்டி வரவேற்று போட்டோ எடுத்துக் கொள்வார்கள். மாறாக ரிப்பன் வெட்டவோ, குத்து விளக்கு ஏற்றவோ மாட்டார்கள். இது தான் நடைமுறை.

இந் நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை கோவிலூர் பைபாஸ் சாலை அருகே ரூ.90.20 லட்சம் செலவில் அரசினர் விருந்தினர் மாளிகை கட்டப் பட்டது. இதை சென்னை தலைமை செயலகத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.

இதற்காக முத்துப் பேட்டை அரசினர் விருந்தினர் மாளிகையில் விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அப்போது புதிய கட்டிடத்தில் ரிப்பன் கட்டி வைத்திருந்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, கட்டிடத்தை திறக்கும் நேரத்தில் கலெக்டர் மதிவாணன், எஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோர் வந்தனர்.

அப்போது விருந்தினர் கட்டிடத்தில் ரிப்பன் கட்டி இருந்ததை பார்த்து கலெக்டர் மதிவாணன் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து இந்த ரிப்பனை கட்டியது யார், அம்மாதான் கட்டிடத்தை திறக்க போகிறார்கள் என்று அதிகாரிகளை எச்சரித்தார்.இதை தொடர்ந்து அதிகாரிகள் அவசர அவசரமாக ரிப்பனை அகற்றினர்.

 

தினகரன்.

 

புகைப்படம்..முத்துப்பேட்டை நபில்.

 

 

535222_1664330747113109_2709376993547357612_n1472961_1664330910446426_4059388153266614212_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.