ஏர்வாடி காஜாமைதீன் கொலை: இஸ்லாமிய அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தின் படங்கள் இணைப்பு.நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் காஜாமைதீன் (வயது 25). இவர் இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகியாவும் இருந்து வந்தார். கடந்த 21–ந் தேதி இரவு சவாரிக்கு அழைத்த ஒரு பெண்ணுடன் காஜாமைதீன் ஏர்வாடி அருகே உள்ள காந்திநகருக்கு சென்றார். அப்போது காட்டுப்பகுதியில் வழிமறித்த ஒரு கும்பல் காஜாமைதீனை வெட்டி கொலை செய்தது.

இதையடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் ஏர்வாடியில் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. ஏர்வாடி வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து 3–வது நாளாக இன்றும் பஸ்கள் அந்த வழியாக செல்லவில்லை.

இந்த நிலையில் கொலையான காஜாமைதீன் உடல் பாளை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், காஜாமைதீன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 3–வது நாளாக இன்றும் காஜாமைதீன் உடலை வாங்க மறுத்துள்ளனர்.

மேலும் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் ஏர்வாடி பஜாரில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். காஜாமைதீன் உறவினர்களிடமும், இஸ்லாமிய அமைப்பினரிடமும் நெல்லை போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது காஜாமைதீன் உடலை வாங்க அவர் வலியுறுத்தினார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் கூறிவிட்டனர்.

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை ஏர்வாடி பஜாரில் ஆர்ப்பட்டம் நடத்த இஸ்லாமிய அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக செங்கோட்டை, கடைநல்லூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இஸ்லாமிய மக்கள், பல்வேறு கட்சியினர் திரண்டு வர உள்ளனர்.

இதையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க ஏர்வாடியில் 500–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் பொத்தையடியை சேர்ந்த பெண் உள்பட 7 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி இந்து அமைப்பினர் நேற்று நெல்லை கலெக்டரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து விசாரணைக்குப் பின் அவர்கள் இன்று விடுவிக்கப்படலாம் என தெரிகிறது.

பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ள இந்த கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் யார்? என்ற மர்மம் விலகவில்லை. பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் கொலைக்கான காரணம் என்ன என்பதும் தெளிவாகவில்லை.

இதற்கிடையில் காஜாமைதீன் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வருவது போலீசாருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

q1a q2 q4 q5 q1 q3

 

 

10411287_1011456542229713_2073552071253723089_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.