சவுதியில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த குடந்தை வாலிபர் மாயம்.சவுதியில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த குடந்தை வாலிபர் மாயமானார். அவர் கடத்தப் பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சிவபுரத்தை சேர்ந்த ஆதித்தன் மகன் கண்ணன் (32). இவர் கடந்த 2013ம் ஆண்டு சவுதிக்கு எலக்ட்ரிசியன் வேலைக்கு சென்றார். 2 ஆண்டுகள் வேலை பார்த்து விட்டு சொந்த ஊருக்கு திரும்ப முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்.

இந் நிலையில் கடந்த 18ம் தேதி மதியம் 2 மணிக்கு திருச்சி வர டிக்கெட் புக் செய்துள்ளதாகவும், சவுதியில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வரும் லங்கன் விமானத்தில் வந்து இறங்க இருப்பதாகவும் போன் மூலம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரது வீட்டார் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் கடந்த 18ம் தேதி இரவு வரை வீட்டிற்கு திரும்பவில்லை. கண்ணன் வைத்திருந்த வெளி நாட்டு எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை. இதை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த கண்ணனின் உறவினர்கள் திருச்சி விமான நிலையத்தில் உள்ள லங்கன் விமான நிறுவனத்திடம் சென்று கேட்ட போது, விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை சரி பார்த்து, கண்ணன் 18ம் தேதி மதியம் திருச்சி வந்து விட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கண்ணன் உறவினர்கள் ஏர்போர்ட் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். புகாரை பெற்ற போலீசார் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருக்கலாம், சில நாட்கள் காத்திருக்கும் படி கூறினர்.

ஆனால் வெளி நாட்டில் இருந்து திரும்பிய கண்ணன் நேற்று வரை வீட்டிற்கு வராததால் ஏர் போர்ட் போலீசார் வழக்கு பதிந்து கண்ணனை யாரும் கடத்தி சென்றனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.