ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற வாலிபரை காப்பாற்றிய துருக்கி அதிபர் எர்டோகன். படங்கள் இணைப்பு.ஆற்றுப் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற வாலிபரை துருக்கி அதிபர் காப்பாற்றியுள்ளார்.

துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் ஐரோப்பிய நாடுகளை ஆசிய நாடுகளுடன் இணைக்கும் புகழ்பெற்ற போஸ்பரஸ் ஆற்றுப்பாலம் உள்ளது.நீர்மட்டத்தில் இருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் தற்கொலை செய்து கொள்ளும் துருக்கியர்களின் உகந்த தேர்வாகவும் விளங்கி வருகின்றது.

ஒரு வாலிபர் போஸ்பரஸ் ஆற்றுப் பாலத்தின் நடுவே தனது காரை நிறுத்தினார். பின்னர் பாலத்தின் மேல்ஏறி அங்கிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதைப் பார்த்த காவல்துறையிர் அவரை கீழே இறங்கி வருமாறு சுமார் இரண்டு மணிநேரம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் அவர் அதை கேட்கவில்லை.

காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து போராடி வந்தனர். அப்போது அந்த வழியாக துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தனது பாதுகாவலர்களுடன் காரில் வந்தார். அப்போது, பாலத்தின் விளிம்பில் நின்றபடி காவல்துறையினருடன் அந்த வாலிபர் வாக்குவாதம் செய்துகொண்டிருப்பதை கவனித்தார்.

உடனே, ஓட்டுனரிடம் காரை நிறுத்தச் சொன்னார். அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து அந்த வாலிபரை தன்னிடம் கூட்டிவருமாறு உத்தரவிட்டார். அந்த வாலிபரை நோக்கி விரைந்துசென்ற அதிகாரிகள், "தங்களை அதிபர் அழைக்கிறார்" என அவரிடம் தெரிவித்தனர். சற்று யோசித்த அந்த வாலிபரை பத்திரமாக கீழே இறக்கி அதிபரிடம் அழைத்துச் சென்றனர்.

அதிபர் தனது பேச்சாற்றலால், வாழ்க்கையின் தோல்விகளுக்கு தற்கொலை தீர்வாகிவிட முடியாது என்றும் துன்பங்களை எதிர்த்து நின்று போராடும் மன உறுதியால் எந்த துன்பத்தையும் வென்று விடலாம் என்றும் அந்த வாலிபருக்கு எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து, அந்த வாலிபர் தனது தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டார். மேலும், தற்கொலை செய்துகொள்ளப்போவதில்லை என்றும் அதிபருக்கு வாக்குறுதி அளித்தார். இந்த சம்பவத்தை அந்நாட்டு ஊடகங்களின் தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

a1a2 a3
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.