முத்துப்பேட்டை அருகே ஜவுளிக்கடை ஓனரை தாக்கிய மாஜி கவுன்சிலர் கைது.முத்துப்பேட்டை அருகே ஜவுளிக் கடை உரிமையாளரை தாக்கிய முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கைது செய்யப் பட்டார்.

முத்துப் பேட்டை அடுத்த இடும்பாவணம் கடைத் தெருவில் ஜவுளிக் கடை வைத்திருப்பவர் பாஸ்கர். இவரது கடைக்கு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் போஸ் என்கிற சந்திர போஸ் துணிகளை எடுக்க நேற்று வந்திருந்தார்.

அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்திரபோஸ், ஜவுளிக் கடை உரிமையாளர் பாஸ்கரை தாக்கினார். மேலும் கடையில் உள்ள பொருட்களை சேதப் படுத்தினார். இது குறித்து தகவல் அறிந்ததும் முத்துப் பேட்டை டிஎஸ்பி அருண் தலைமையில் போலீசார் வந்து சந்திரபோசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.