வெள்ள நிவாரணத்துக்கு வெளிநாட்டு பொருட்கள்: சுங்க வரி விலக்கு பெறுவது எப்படி? 

வெள்ள நிவாரணமாக பெறப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு பெறுவது எப்படி? என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

இதுகுறித்து சுங்க இலாகா முதன்மை ஆணையர் கே.ஆர்.என்.சாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

 

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்-மறுவாழ்வுக்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பொருட்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கக்கோரி ஏராளமான முறையீடுகள் பொதுமக்கள், அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வந்து கொண்டிருக்கிறது.

 

ஏற்கனவே இதுபோன்ற அமைப்புகளுக்கு ஏழைகள் பெறுவதற்காக பல நிபந்தனைகள் எனும் அடிப்படையில் உணவு, மருந்து-மாத்திரைகள், துணிமணிகள் போன்றவற்றிற்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளன. இந்த நிபந்தனைகள் அடிப்படையில் வராதவர்கள் 2014-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

 

இதற்கான படிவங்களை பெற மத்திய கலால் மற்றும் சுங்கவரி மத்திய போர்டு உறுப்பினர் (சுங்கம்), வடக்கு பிளாக், நியூடெல்லி 110001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான மேலும் விவரங்களை பெற விரும்புவோர் கீழ்க்கண்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்:-

 

சுங்க இலாகா முதன்மை ஆணையர் கே.ஆர்.என்.சாரி - 9445848899

 

விமான நிலைய கூடுதல் ஆணையர் டாக்டர் டி.டிஜ்ஜூ - 8754551301, 7358044045

 

இணை ஆணையர்கள் எஸ்.பி.சிங் - 8220251073, வி.பி.ராவ் - 9789521852

 

உதவி ஆணையர் தங்கமணி (கப்பல் போக்குவரத்து) - 9443246440.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.