ஏர்வாடி ஆட்டோ ஓட்டுநர் காஜா முகைதீன் கொலைக்கான காரணம் ஓரிரு நாளில் தெரிய வரும்.ஏர்வாடி ஆட்டோ ஓட்டுநர் கொலைக்கான காரணம் ஓரிரு நாளில் தெரியவரும் என தேசிய மனித உரிமை கமிஷன் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் மாநில செயலர் வழக்குரைஞர் ஆ. ராஜா, திருநெல்வேலியில் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

ஏர்வாடி ஆட்டோ ஓட்டுநர் காஜா முகைதீன் (25) கொலை வழக்கு தொடர்பாக, 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை 2 தினங்கள் சந்தித்து கொலைக்கான காரணம் குறித்து கேட்டறிந்தோம்.

இதன் மூலம் கிடைத்த தகவல்களின்படி, சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட முத்துராமன் என்பவரின் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இக்கொலை நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.

காஜா முகைதீன், இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்ட தகவல், அவரது குடும்பத்தினருக்கு பல மணி நேரத்திற்குப் பிறகுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆகியோர், இக்கொலை நிகழ்ந்ததற்கான காரணம் ஓரிரு நாளில் தெரியவரும்; குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர். இக்கொலைக்கான உண்மையான காரணம் ஓரிரு நாளில் தெரியவரும். உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறோம் என்றார் அவர்.

பேட்டியின்போது, அமைப்பின் தேசியக் குழு உறுப்பினர் இரா.சி. தங்கசாமி, மாநில பொதுச்செயலர் என்.எம். ஷாஜஹான், மாநில செயலர் ஏ. ராஜா முகம்மது, நிர்வாகக் குழு உறுப்பினர் கே. நிஜாமுத்தீன், வழக்குரைஞர் எம். ஆரிப் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.

10580797_430140903845534_7122821130705212501_o
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.