பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் ஹராம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு.யோகா குருபாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் ஹராம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் பத்வா(தீர்ப்பு) அளித்துள்ளார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் சகோதரர் பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாநில தலைமையத்தில் இரண்டாம் ஜூம்மா உரையில் குருபாபா ராம்தேவ்வின் பதஞ்சலி பொருட்களை முஸ்லிம்கள் ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதை தெளிவு படுத்தியிருந்தார்கள்.

அதன் அடிப்படையிலும் தவ்ஹீத் ஜமாத் சார்பாக இதைப்பற்றி (29-12-2015) செவ்வாய் கிழமை மார்க்க பத்வா(தீர்ப்பு)வழங்கப்பட்டுள்ளது. இந்த மார்க்க தீர்ப்பை மாநில பொதுச்செயலாளர் சகோதரர் மு.முகமது யூசுப் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

அதில் யோகா குருபாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி சார்பில் உணவு பொருட்களும், அழகு சாதன பொருட்களும் மற்றும் மருந்துகளும் தயாரிக்கப்பட்டு கடைகளின் வாயிலாகவும் இணையதளங்களின் வாயிலாகவும் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளில் மாட்டு மூத்திரத்தையும் ஒரு மூலப்பொருளாக சேர்க்கின்றனர். மாட்டு மூத்திரம் முஸ்லிம்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் பயன்படுத்தக்கூடாத ஹராமான பொருளாகும்.

ஆகையால் இதை மூலப்பொருளாக வைத்து தயாரிக்கப்பட்ட பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும் முஸ்லிம்கள் பயன்படுத்தக் கூடாத ஹராமான பொருளாக மாறி விடுகிறது.எனவே பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் ஹராம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் பத்வா (தீர்ப்பு) அளிக்கிறது.

அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடியபொருட்களின் மூலப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமலோ அல்லது அறியாமையினாலோ முஸ்லிம்கள் பதஞ்சலி நிறுவனத்தின் ஹராமான பொருட்களை பயன்படுத்தி விடக் கூடாது என்ற காரணத்தினால் இந்த பத்வா அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படிக்கு
மு.முஹமது யூசுப்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தொடர்புக்கு: 9789030302
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.