முத்துப் பேட்டை அலையாத்திக் காட்டுக்கு ஆசாத் நகரிலிருந்து படகில் செல்லும் சுற்றுலா பயணிகள்.பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முத்துப் பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

முத்துப் பேட்டை அலையாத்திக் காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்டதாகும். இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந் நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப் பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இதனால் ஆசாத் நகர் மற்றும் ஜாம்புவானோடை படகு துறையில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்வதற்காக தனியார் மீன் பிடி படகுகள் அணிவகுத்து நிற்கிறது.

இது குறித்து சுற்றுலா பயணியான திருவாரூர் முகம்மது குத்புதீன் கூறுகையில், ஆசாத் நகர் துறைமுகத்திலிருந்து அலையாத்திக் காடு அமைந்துள்ள லகூன் பகுதிக்கு படகில் சென்றோம். காடு களின் அழகை ரசிக்க நேரம் தான் போதுமானதாக இல்லை. அலையாத்தி காட்டை வனத்துறையினர் பாதுகாப்பாக வைத்துள்ளனர். சுற்றுலா பயணிகளான எங்களுக்கு பல் வேறு வசதிகளை ஏற்படுத்தி வைத்துள்ளனர் என்றார்.
lagoon 2 Photo A20151231a_00610601001
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.