ஏர்வாடியில் கொலை செய்யப்பட்ட காஜாமைதீன் உடல் இன்று நல்லடக்கம்.நெல்லை மாவட்டம் ஏர்வாடி 4–வது தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் காஜாமைதீன் (வயது 25). இவர் இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகியாவும் இருந்து வந்தார். கடந்த 21–ந் தேதி இரவு சவாரிக்கு அழைத்த ஒரு பெண்ணுடன் காஜாமைதீன் ஏர்வாடி அருகே உள்ள காந்திநகருக்கு சென்றார். அப்போது காட்டுப்பகுதியில் வழிமறித்த ஒரு கும்பல் காஜாமைதீனை வெட்டி கொலை செய்தது.

இதையடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. ஏர்வாடியில் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. உடனடியாக ஏர்வாடியில் 500–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்கு பதிவு செய்தார். கொலை செய்யப்பட்ட காஜாமைதீன் உடலை போலீசார் கைப்பற்றி பாளை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை செய்யப்பட்ட காஜாமைதீன் உடலை அவரது பெற்றோரும், உறவினர்களும் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவரது உடல் பாளை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி காஜாமைதீன் உடலை வாங்க வலியுறுத்தினார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், காஜாமைதீன் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உடலை வாங்க மறுத்து விட்டனர்.

இதனால் கடந்த 3 நாட்களாக காஜாமைதீன் உடல் பாளை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை ஏர்வாடியில் அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் சார்பில் காஜாமைதீன் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தொடர்ந்து காஜாமைதீன் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். மேலும் மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் காஜாமைதீன் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதன் அடிப்படையில் இன்று காலை 7.30 மணிக்கு காஜாமைதீன் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து அவரது உடல் பாளை அரசு மருத்துவமனையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏர்வாடிக்கு எடுத்து செல்லப்பட்டது. உடலுடன் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர்.

ஏர்வாடி பஜார் பகுதியில் காஜாமைதீன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஏர்வாடி வழியாக 4–வது நாளாக பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

ஊர்வலத்தில் திரளான முஸ்லிம் அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த ஜனாசா தொழுகைக்கு பின்னர் காஜாமைதீன் உடல் ஏர்வாடியில் உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில் கலந்து கொண்ட முஸ்லிம் அமைப்பினர் கூறும்போது, ‘காஜாமைதீனை கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. மேலும் எங்களது கோரிக்கைகளும் நிறைவேற்றபடவில்லை. இதனால் எங்கள் போராட்டம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெறும்’ என்றனார்.

46814_429024783957146_6437581677060898944_n
1978834_429024890623802_273429778751164143_n

12376707_429024857290472_501749267405355851_n

12391813_429024920623799_5610504481381660633_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.