திருத்துறைப்பூண்டி அருகே வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடி:திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள ஒவரூர் கிராமத்தை சேர்ந்த சரவணக்குமார் புகார் மனு அளித்தார்.

அதில் திருத்துறைப்பூண்டி மடப்புரத்தை சேர்ந்த செந்தில்நாதன் தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.1 லட்சம், ஒரிஜினல் பாஸ்போர்ட்டு பெற்றுக் கொண்டார்.

ஆனால் என்னை அவர் வெளிநாட்டுக்கு அனுப்ப இல்லை. பணத்தை திருப்பி தரவும் இல்லை. எனவே செந்தில்நாதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணம், பாஸ்போர்ட்டை பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதே போல் திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பேரில் வசித்து வரும் கவியரசன், நன்னிலம் அச்சுதமங்கலம் மணிகண்டன் உள்பட 30–க்கும் மேற்பட்டோர் தலா ரூ. 1 லட்சத்தை செந்தில் நாதன் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக மனு அளித்தனர்.

மொத்தம் ரூ. 30 லட்சம் வரை செந்தில் நாதன் ஏமாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.