நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா.முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம், கல்விக்குழு மற்றும் தமிழ்நாடு வன துறை இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தாஹீர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கவுன்சிலர் முருகையன், உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், தலைமையாசிரியர் ரெத்தினசாமி, முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் அழகிரிசாமி, பொருளாளர் இராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் பக்கிரிசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்ரமணியன், நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் பொன்.வேம்பையன், பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, முன்னால் ஒன்றிய கவுன்சிலர் முகைதீன் பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக முத்துப்பேட்டை வன சரக அலுவலர் அயுப்கான் கலந்து கொண்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் உதைய தங்கராஜன், பாலா மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்

படம் & செய்தி நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை.

முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம்,கல்விக்குழு மற்றும் தமிழ்நாடு வன துறை இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழாவில் வன சரக அலுவலர் அயுப்கான் கலந்து கொண்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

12390910_442518969279070_2785277911189710269_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.