பீப் பாடல் பற்றிய கேள்வி: பத்திரிக்கையாளரை திட்டிய இளையராஜா.நடிகர் சிம்பு பாடி சர்ச்சைக்குள்ளான பீப் பாடல் பற்றி ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு இளையராஜா கோபமடைந்து அவரை திட்டி தீர்த்து விட்டார்.

சென்னை மக்கள் மழையால் பாதிக்கப்பட்ட போது இசையமைப்பாளர் இளையராஜா, அவரே களத்தில் இறங்கி ஏராளமான உதவிகள் செய்தார். மழை வெள்ளத்தால் சூழ்ந்த ஒரு காது கேளாதவர் பள்ளிக்கு சென்று, அங்கு தவித்த குழந்தைகளை மீட்டார்.

மேலும் அவர்களுக்கு உணவு பொருட்களும் வழங்கினார்.இந்நிலையில், மழையால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டதை பற்றி பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு செய்தியாளர், சமீபத்தில் வெளியாகி சர்சைக்குள்ளான பீப் பாடல் பற்றி அவரிடம் கருத்து கேட்டார்.

அதில் கோபமடைந்த இளையராஜா “உனக்கு அறிவிருக்கிறதா? அதற்காகவே நாம் இங்கே கூடியிருக்கிறோம்?” என்று கேள்வி கேட்டு அந்த அந்த செய்தியாளரை ஒரு வழி பண்ணி விட்டார்.
அருகிலிருந்தவர்கள் அவரை சமாதனப்படுத்தினர். அந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.
அதை நீங்களே பாருங்கள். . .

https://www.facebook.com/513672162125841/videos/537769749716082/?video_source=pages_finch_main_video&theater
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.