முத்துப்பேட்டை அ.தி.மு.க. பிரமுகர் அண்ணன் கொலை: மேலும் ஒருவர் கைது. 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் ஜெகன். அ.தி.மு.க. பிரமுகர். திருத்துறைப்பூண்டி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருகிறார். இவரது அண்ணன் மதன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக ஜெகன் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

 

அதன் அடிப்படையில் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை தொடர்பாக பாரதீய ஜனதா மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

ராஜேஷ், சரணவன், வினோத், மந்திர மூர்த்தி, சந்திரபோஸ் ஆகியோர் மதுரை 2–வது குற்றவியல் கோர்ட்டில் சரண் அடைந்தனர். தமிழரசன், மணிகண்டன், ஆகியோரை தனிப்படையினர் கொரடாச்சேரியில் கைது செய்தனர்.

 

போலீசாரால் தேடப்பட்டு வந்த மனோகரன், இளங்கோ, அய்யப்பன் ஆகியோர் திருமயம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த நிலையில் திருமயத்தை சேர்ந்த அறிவு என்கிற சிவராஜன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இதற்கிடையே ராஜேஷ், சரவணன், வினோத் ஆகியோரை கோர்ட்டு அனுமதி பெற்று தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.