ஓடும் ரெயிலின் கழிவறையில் குழந்தை பெற்ற பெண் தவறி விழுந்தும் உயிர் பிழைத்த சம்பவம்.உத்தரபிரதேசத்தில் ஓடும் ரெயிலின் கழிவறையில் நேபாள பெண் பெற்றெடுத்த குழந்தை, தண்டவாளத்தில் தவறி விழுந்தும் உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

நேபாளத்தின் கஞ்சன்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மோகன் நகரை சேர்ந்தவர் புஷ்பா தம்பா (வயது 40). நிறைமாத கர்ப்பிணியான இவர் தனாக்பூர்-பரேலி பயணிகள் ரெயில் பயணம் செய்தார்.

சிறிது தூரம் சென்றதும் புஷ்பா கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. அங்கேயே குழந்தை பெற்று உள்ளார். குழந்தை கழிவறையின் ஓட்டை வழியாக குழந்தை தண்டவாளத்தில் விழுந்தது.இதை பார்த்த புஷ்பா கதறி அழுதார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் ரெயிலை நிறுத்தினர். தண்டவாளத்தில் விழுந்த குழந்தை மீட்கபட்டது. தாயும் சேயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.