நேற்று நடந்த நெகிழ வைத்த சம்பவம் பற்றி தோழர் சகாப்தன். 

நேற்று காலை பூந்தமல்லி மருத்துவ முகாமிலிருந்து  ஒரு அழைப்பு,  "ஜீவா  சனிக்கிழமை  நடத்த இருக்கும் மருத்துவ முகாமிற்கு போதுமான மருந்துகள் இல்லை. உடனடியாக உயிர்காக்கும் மருந்துகள் தேவை.உடனடியாக ஏற்பாடு செய்யமுடியுமா"?. "நான் முயற்சி செய்கிறேன் "என்று சொல்லிவிட்டு அலைபேசியை முடித்துக்கொண்டேன்.

 

உடனே, மவுண்ட்ரோட் பெரிய பள்ளிவாசல் இமாம் சம்சூதின் Moulana Shamsudeen Qasimi அவர்களை தொடர்பு கொண்டு, உங்கள் முகாமில் மருந்துகள் இருக்கிறதா.?பூந்தமல்லி மருந்துவ முகாமிற்கு மருந்துகள் தேவை என்றேன்.

 

உடனே," ஜந்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உயிர்காக்கும் மருந்துகள் என்னிடம் இருக்கின்றன. உடனடியாக அனுப்பி வைக்கிறேன்" என்று பதில் வந்தது. உண்மையில் மகிழ்ச்சியில் உறைந்து போனேன்.

 

உடனடியாக  5 இலட்சம் மதிப்புள்ள மருந்துகளை என்னால் ஏற்பாடு செய்யமுடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உணவு பொருட்கள் மட்டுமின்றி மருத்துவ பொருட்களையும் நிவாரணமாக வழங்கிவரும் பள்ளிவாசல் இமாம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

 

இது போன்ற உள்ளங்கள் இருப்பதால்தான் பேரிடர் காலங்களையும் எதிர்கொண்டு பூமி புத்துயிர் பெற்றுக்கொண்டிருக்கிறது.உயிர் காக்கும் மருந்துகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டுசேர்த்ததில் எனது பங்கும் இருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது பெருமை கொள்கிறேன்.

 

ஊடகவியலாளனாய் தலைநிமிர்கிறேன்.

 

தோழர் Jeeva Sagapthan

 

தகவல்...அப்துல் கரீம்.

 

12311192_957989347629488_325241411024593901_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.