விமானத்தின் கூரை மீது பயணிக்க புதிய தொழில்நுட்பம் . (பிரமிப்பு வீடியோ)தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல் கல்லாக, பறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பேருந்து மீது பயணம், ரயில் மீது பயணம் செய்த காலம் சென்று தற்போது விமானத்தின் மீதும் அமர்ந்து சொகுசாக இயற்கை காட்சிகளை அனுபவித்தவாறு பயணம் செய்யும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை வின்ட்ஸ்பீடு (Windspeed) என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்கைடெக் (SkyDeck) என்ற அழைக்கப்படும் அந்த தொழில்நுட்பம், விமானத்தின் கூரை மேல் மையத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த கூண்டை சுற்றி பாதுகாப்பான மற்றும் உறுதியான கண்ணாடி சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கூண்டிற்கு செல்வதற்கு விமானத்திற்குள்ளே இருந்து தானியங்கி படிக்கட்டுகள் மற்றும் ஆள் தூக்கி (Lift) வசதியும் உள்ளது.

விமானத்திற்குள் உள்ள ஒரு சிறப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு இருக்கைகளில் அமர்ந்துகொண்டால், அந்த இருக்கைகள் மேலே தூக்கி செல்லப்பட்டு கூரை மீதுள்ள கண்ணாடி கூண்டிற்குள் நிலை நிறுத்தப்படும். பின்னர், எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும், சோர்வு ஏற்படாமல் சுமார் 360 டிகிரி சுற்றளவு வரை சுற்றி பார்த்துக்கொண்டு பயணம் செய்யலாம்.

அதாவது, பூமியிலிருந்து சுமார் 3,00,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டு இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டு பயணிக்கலாம்.இதுபோன்ற வசதியினை எந்தவிதமான நவீன விமானத்திலும் பொருத்தலாம் என வின்ட்ஸ்பீட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வசதியினை விமானத்தில் பொருத்துவதற்கு 8 முதல் 25 மில்லியன் டாலர் வரை செலவாகும்.
இது குறித்து வின்ட்ஸ்பீடு நிறுவனம் கூறுகையில், "தொலை தூர விமானப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சோர்வு ஏற்படாமல் இருக்கவே இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த நவீன வசதியை தற்போது காப்புரிமை மட்டுமே செய்து நிலையில், இது விரைவில் நவீன விமானங்களில் பொருத்தப்பட உள்ளது' என்று தெரிவித்துள்ளது.

எனினும், இந்த வசதியை பயண்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

 

 

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.