ஒன்றரை வயது குழந்தைக்கு தலைக்கு பதிலாக மூக்குக்குள் மூளை:இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள மாஸ்டெக் நகரில் வசிக்கும் ஆமி பூலே என்ற பெண்ணுக்கு கடந்த 2014-ம் ஆண்டு இரண்டாவது பிரசவத்தில் பிறந்த ஆண்குழந்தைக்கு மூக்கின் நுனிப்பகுதியில் பெரிய எலுமிச்சைப்பழ அளவில் இருந்த கட்டி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.

அரிதிலும் அரிதாக மண்டையோட்டின் துவாரம் வழியாக மூக்குக்குள் மூளை வளரும் என்செபாலோசெல் (encephalocele) எனப்படும் பிறவிக்குறைப்பாட்டால் அந்த குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறினர்.

அடுத்தடுத்து பல ஆபரேஷன்களின் மூலம் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு தனது மகன் திரும்பினாலும் அண்டை வீட்டாரின் கேலியும், பரிகாசமும் ஆமி பூலேவின் தாயன்பை அசைத்தும் பார்க்க முடியவில்லை.

மற்ற குழந்தளில் இருந்து மாற்றமான தோற்றத்தில் காட்சியளிப்பதில் எங்களுக்கு எந்த மனக்குறையும் இல்லை. என்னதான் இருந்தாலும் அவன் எங்களுக்கு மிகவும் சிறப்பான தேவதூதன் போன்றவன். அவன்மீது நாங்கள் செலுத்தும் அன்பும், காட்டும் அக்கறையும் ஒருநாளும் குறையாது என்கிறார், ஆமி பூலே.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.