முத்துப் பேட்டை அருகே இளம்பெண் மாயம்.முத்துப் பேட்டை அடுத்த கர்ப்பக நாதர் குளம் காடு வெட்டியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன் (32). கொத்தனரான இவர் 5 ஆண்டுகளுக்கு முன் மேல வாடிக் காட்டை சேர்ந்த உமா ராணி (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந் நிலையில் தன்னை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்த்து விடுமாறு உமா ராணி கூறினார். இதனால் தாமரங்கோட்டை தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் உமா ராணியை பால சுப்பிரமணியன் சேர்த்து விட்டார்.

இந் நிலையில் கடந்த 11ம் தேதி தன்னுடைய வேலை தொடர்பாக விண்ணப்பம் அனுப்ப முத்துப் பேட்டைக்கு சென்று வருவதாக கூறி விட்டு உமா ராணி சென்றார். ஆனால் அவர் மாலை வரை வீட்டுக்கு வர வில்லை. இதையடுத்து அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து முத்துப் பேட்டை போலீசில் நேற்று பால சுப்பிரமணியன் புகார் செய்தார். அதில் முத்துப் பேட்டைக்கு சென்ற உமா ராணியை காணவில்லை.

அவர் 6 பவுன் நகைகள் அணிந்திருந்தார். மேலும் ரூ.11 ஆயிரம் வைத்திருந்ததாத தெரிவித்திருந்தார். போலீசார் வழக்குப் பதிந்து மாயமான உமாராணியை தேடிவருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.