சவுதி வரலாற்றில் முதன்முறையாக நகராட்சி தேர்தலில் பெண் வேட்பாளர் வெற்றி.



சவுதி வரலாற்றில் முதன்முறையாக நகராட்சி தேர்தலில் பெண் வேட்பாளர் வெற்றி
மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது.

பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதும் அடங்கும்.

இந்தநிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளாட்சி கவுன்சில் இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. மேலும், 1,050 இடங்களில் மன்னர் ஒப்புதலுடன் நியமனங்கள் செய்யப்படும். பொதுவாக்கெடுப்புக்கான தொகுதிகளில் 900 பெண்கள் உள்பட 6,440 பேர் போட்டியிட்டனர்.

இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் மக்கா நகரில் உள்ள மடறக்கா நகராட்சி உறுப்பினர் தொகுதிக்கு போட்டியிட்ட சல்மா பின்ட் அல்-ஒட்டெய்பி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஏழு ஆண்கள் மற்றும் இரு பெண் வேட்பாளர்களும் தோல்வியை தழுவியுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.