வாட்ஸ் அப்பில் வீடியோ காலிங் வசதி விரைவில் அறிமுகம்.பரிசோதனை அளவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் வீடியோ காலிங் வசதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த இணையதளத்தில் வெளியாகியுள்ள சில ஸ்கிரீன்ஷாட்களின் மூலம் வாட்ஸ்அப்பில் வீடியோ காலிங் வசதி வெளியிடப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய வெர்ஷனை (v2.12.16.2) பயன்படுத்தும் சில ஐ.ஒ.எஸ். வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வீடியோ காலிங் கிடைத்துள்ளது.

தற்போது வெளிவந்துள்ள ஸ்கிரீன்ஷாட்களில் இடது பக்கம் மியூட் பட்டனும், நடுவில் அழைப்பினை துண்டிக்கும் பட்டனும், வலது ஓரம் கேமராவிற்கு செல்லும் பட்டனும் உள்ளது.

எனவே, விரைவில் ஆப்பிள் போனை பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ்அப் வீடியோ காலிங் வசதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் சிறிது காலம் காத்திருக்க நேரிடலாம்.

வாட்ஸ் அப்பில் வீடியோ காலிங் வசதியானது ஆப்பிளின் பேஸ்டைம் அப்ளிகேஷனுக்கு போட்டியாக கொண்டுவரப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.