சவுதி அரேபியாவில் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது.





untitledசவுதி  அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது சவுதி அரசாங்கம். அதன்படி  பின்வரும் விதிமுறைகளை  மீறும் நிறுவனங்களுக்கு  அபராதம் விதிக்கப்படும்.





1. தொழிலாளரின் passport அந்த தொழிலாளரிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி  ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு 2000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.


2. தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தை (employee contract papper) தொழிலாளரிடம் வழங்காத  நிறுவனங்களுக்கு  5000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.


3. தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தில் இல்லாத வேலைகளைச் செய்ய வற்புறுத்தும்  நிறுவனங்களுக்கு  15000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.


4. மாத ஊதியத்தை தாமதமாக தந்தாலோ, அதிகப்படியான (OT) வேலைக்கு ஊதியம்  வழங்காமல் கூடுதல் நேரம் வேலை செய்ய வற்புறுத்தினாலோ அந்த  நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.


5. ஒரு நிறுவனத்தில் 12% சவுதி நாட்டை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அல்லது வேலை வழங்கவில்லை என்றாலோ அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.


6. தங்கள்  நிறுவனத்தில் 12% சவுதி நாட்டை சேர்ந்தவர்கள் வேலை செய்வதாக  போலி  ஆவணங்கள்  சமர்ப்பிக்கும் நிறுவனங்களுக்கு 25000 ரியால்  அபராதம் விதிக்கப்படும் மற்றும் 5 நாட்களில் அந்த நிறுவனம் இழுத்து மூடப்படும்.


7. விசாவை பணத்திற்கு விற்கும் நிறுவனங்களுக்கு 50000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.


8. ஒரு நிறுவனம் உரிமம் இல்லாமல் ஆட்களை சேர்த்தால் 45000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.


9. ஒருமுறை அபராதம் செலுத்திவிட்டு அதே தவறை மீண்டும் செய்தால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.


10. அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.