பிரச்சாரத்தின் போது ஸ்பெயின் பிரதமர் முகத்தில் குத்திய இளைஞன்எதிர்வரும் டிசம்பர் 20-ஆம் தேதி ஸ்பெயினில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அங்கு தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்போது அந்நாட்டுப் பிரதமரின் முகத்தில் இளைஞர் ஒருவர் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிசியா நகரத்தில் அந்நாட்டு பிரதமர் மரியானோ ரஜோய் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கிருந்த சிறிய தேவாலயத்திற்கு முன்பாக திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் அவர் உரையாற்ற சென்றார். அப்போது பிரதமருடன் செல்பி எடுத்துக்கொள்ளவதாக கூறி அவரது அருகில் சென்ற இளைஞர் ஒருவன் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பிரதமர் முகத்தில் ஒங்கி குத்தினார்.

இதில் அவரது மூக்கு கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தால் அந்த கூட்டமே திகைத்து நின்றது. எனினும் சுதாரித்த பாதுகாவலர்கள் பிரதமரை தாக்கிய இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 17 வயது இளைஞன் பெயர் ஹேன்ட்ரஸ் டெல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரதமரை தாக்கியது குறித்து தாம் மகிழ்ச்சி அடைந்ததாக அவன் கூறியுள்ளான்.

ஸ்பெயினில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால் இந்த முடிவை எடுத்ததாக அவன் தெரிவித்துள்ளான். தாக்குதலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜோய் தான் நன்றாக இருப்பதாகவும் பிரச்சனை ஏதும் இல்லை என்றும் கூறினார்.

 

வீடியோவைக்காண.............
https://www.facebook.com/513672162125841/videos/537755706384153/?video_source=pages_finch_main_video&theater
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.