விமானத்திற்கு தாமதமாக வந்த கேரள கவர்னரை உள்ளே அனுமதிக்க ஏர் இந்தியா விமானி மறுப்புவிமானத்தில் ஏற தாமதமாக வந்த கேரள கவர்னர் சதாசிவத்தை விமானத்திற்குள் அனுமதிக்க ஏர் இந்தியா விமானி மறுப்பு தெரிவித்துள்ளார்.

கொச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்ல ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று இரவு 10.40 மணியளவில், புறப்படத் தயாராக இருந்துள்ளது.

அந்த விமானத்தில் கேரள கவர்னர் சதாசிவம் பயணிக்க இருந்துள்ளார். விமானம் புறப்பட 10 நிமிடம் இருந்தபோது, சதாசிவம் விமான நிலையம் வந்துள்ளார்.

அப்போது விமானிக்கு கேரள கவர்னரின் வருகை தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் பயணிகள் அனைவரும் ஏறி, விமானம் புறப்படத் தயாராக இருந்ததால், விமானி இனி கவர்னரை விமானத்திற்குள் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அந்த விமானம்தான் இரவில் கொச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் கடைசி விமானம் என்பதால், கொச்சியில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய கவர்னர் இன்று காலை திருவனந்தபுரம் சென்றுள்ளார்.

அந்த விமானம் இரவு 9.15 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில், அட்டவணை மாற்றப்பட்டதால், இரவு 10.45 மணிக்கு புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும் கேரள கவர்னர் தாமதமாக வந்துள்ளார்.

தற்போது கேரள கவர்னர் மாளிகையில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.