தமிழர் தொடங்கி வைத்த இஸ்லாமிய பயணிகளுக்கான விமான சேவை. படங்கள் இணைப்பு.இஸ்லாமிய பயணிகளுக்காகவே தமிழர் ஒருவர் மலேசியாவில் விமான சேவை ஒன்றை தொடங்கியுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ரவி அழகேந்திரன் தனது குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறார். ரவி தனது மனைவி கார்த்தியானியுடன் மலேசிய முஸ்லிம் பயணிகளுக்காகவே ""ரயானி எயர்வேஸ்"" என்ற விமான நிறுவனம் ஒன்றை தோற்றுவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் முதல் விமான சேவை இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் லங்காவி நகருக்கு 150 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில் வேலை செய்யும் பணிப் பெண்கள் ஹிஜாப் அணிந்து பணியாற்றுவார்கள் எனவும், ஹலாலான உணவு வகைகள் தான் பரிமாறப்படும் எனவும், மதுபானங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும் நிறுவனர் ரவி தெரிவித்துள்ளார்.

லங்காவி நகருக்கு மட்டுமே தொடங்கப்பட்ட விமான சேவை, மலேசியாவின் மற்ற நகரங்களுக்கும் விரைவில் சேவையை அளிக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், இது முக்கியமாக இஸ்லாமிய பயணிகளை கவரவே இந்த சேவையை தொடங்கியுள்ளதாகவும், மற்ற விமான சேவைகளில் இஸ்லாமிய பயணிகளுக்கு இருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவே இந்த விமான சேவையை தொடங்கியதாகவும் ரவி மீண்டும் தெரிவித்தார்.

இஸ்லாமிய நாடான மலேசியாவில் இப்படிப்பட்ட விமான சேவையை விமான நிறுவனமான ரயானி ஏர் தான் முதன் முதலாக தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

a4

 

 

a3a2a8a1

 

 

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.