சவூதி அரேபியாவில் திருடர்களால் தாக்கப்பட்டவரை அருகே இருந்து உதவிசெய்யும் முதலாளி.சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் பிரபல டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்தவர் தேவராஜன். ஜித்தாவிலிருந்து லோடு ஏற்றி ரியாத்திற்கு ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். வந்த களைப்பின் காரணமாக லாரியை ஓரமாக ஒதுக்கி வைத்து தூங்கியுள்ளார்.

இதை கண்ட சோமாலியாவை சேர்ந்த சில திருடர்கள் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு சென்று விட்டனர். படுகாயமடைந்த தேவராஜனை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து ரியாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தேவராஜன் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு தகவல் கிடைத்ததும் அவர் விரைந்து வந்து காவல்துறையின் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலவரத்தை கூறியுள்ளார். பின்னர் இரவு பகல் பாராமல் தேவராஜனுடன் அருகில் இருந்து கூடப்பிறந்த சகோதரனைப்போல் சகோதர வாஞ்சையுடன் ஒவ்வொரு உதவிகளையும் செய்து வருகிறார்.

அவர் செய்யும் அந்த உதவிகளை அவருக்கே தெரியாமல் அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியில் விட்டுள்ளனர்.

[gallery columns="2" ids="29810,29811,29812,29813"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.