முத்துப்பேட்டையில் சாலையில் கண்டெடுத்த மாணவிகளின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள்முத்துப்பேட்டையில் சாலையில் கண்டெடுத்த மாணவிகளின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் முக்கிய பல்வேறு ஆவணங்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் பேரூராட்சி பணியாளர்கள் கருணாநிதி, கோபி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி மருதுராஜேந்திரன் ஆகியோர் கடந்த 12-ம் தேதி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது சாலையில் பைல் ஒன்று கண்டெடுத்தனர். அதில் மன்னார்குடி அருகே உள்ள கெழுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் ஜானகி, நதியா, சித்திரா, கௌசல்யா, பிரியங்கா ஆகியோரின் கல்லூரி மற்றும் பள்ளி சான்றுதழ்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பல்வேறு ஆவணங்கள் அதில் இருந்தது.

இதனையடுத்து கண்டெடுத்த மூவரும் அதில் இருந்த செல்நம்பரைக் கண்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதில் ஜானகி என்ற மாணவி எம்.எஸ்.சி.பட்டப்படிப்பு படித்துவருகிறார். இவருக்கு கடந்த 1 வருடங்களுக்கு முன்பு திருமணமாகிவிட்டது.

வேலை சம்மந்தமாக மற்ற மாணவிகளிடம் சான்றுதழ்கள் சேமித்து வைத்திருந்ததாகவும் சில தினங்களுக்கு முன்பு கணவர் வீட்டிலிருந்து தாய் வீட்டுக்கு செல்லும் போது சான்றுதழ்கள் அடங்கிய அந்த பைலை விட்டு சென்றதாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து நேற்று ஜானகியின் தாய் கலையரசி மற்றும் அவரது உறவினர் தங்கமணி ஆகியோரிடம் சாலையில் கண்டிடெடுக்கப்பட்ட அனைத்து ஆவணங்களுடன் அடங்கிய அந்த பைலை பேரூராட்சி பணியாளர் கருணாநிதி மற்றும் முன்னால் திமுக ஒன்றிய கவுன்சிலர் வேல்துரை ஆகியோர் வழங்கினார்கள் ஆவணங்களை பெற்றுக் கொண்ட அவர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வாங்கி சென்றனர். சாலையில் கண்டிடெடுத்த ஆவணங்களை உரியவரிடம் ஒப்படைத்த மூவரையும் பொதுமக்கள் பாராட்டினர்.

படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை

முத்துப்பேட்டையில் சாலையில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள் கொண்ட பைலை மாணவி ஜானகியின் தாய் கலையரசியிடம் பேரூராட்சி பணியாளர் கருணாநிதி மற்றும் முன்னால் திமுக ஒன்றிய கவுன்சிலர் வேல்துரை ஆகியோர் வழங்கினார்கள்.

 

12376079_441661442698156_1911009745755498837_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.