சென்னை வெள்ள நிவாரண உதவி: நெகிழ வைத்த இஸ்லாமிய ஆட்டோ டிரைவர்!missing-autoமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ பணக்காரராகவோ அல்லது ஒரு நிறுவனத்திற்கு சொந்தக்காரராகவோ அல்லது அறக்கட்டளை வைத்து நடத்துபவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. எளியோருக்கு இரங்கிடும் குணம்தான் முக்கியம் என நிரூபித்துள்ளார்  மும்பை  ஆட்டோ  டிரைவர்  ஒருவர்.

மும்பையில் வசிப்பவர் ஷாலினி கிரிஷ். சென்னையை சேர்ந்தவரான இவர் மும்பையில்  நகைக்கடை  ஒன்றை  நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன் இவர் மும்பையில் ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது, சென்னை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தனது குடும்பத்தினரிடம் இருந்து வந்த அழைப்பை தொடர்ந்து, தனது செல்போனில்  கவலையுடனும், பதற்றத்துடனும்  பேசியபடியே சென்றுள்ளார்.


அவர் பேசி முடித்தவுடன், அவர் சென்ற ஆட்டோ டிரைவர், " மேடம் ஊரில் ( சென்னையில் )  உங்களது உறவினர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனரா...? "  எனக் கேட்டுள்ளார்.


அதனைக்கேட்ட ஷாலினியும் 'ஆமாம்...!' என பதிலளித்து,  சென்னையின் வெள்ள பாதிப்புகள் குறித்து சுமார் 10 நிமிடங்கள் அந்த ஆட்டோ  டிரைவரிடம்  விளக்கியபடியே  தனது  வீட்டிற்கு வந்து இறங்கி உள்ளார்.


இறங்கிய  உடன்,   ஆட்டோ கட்டணத்தை கொடுப்பதற்காக அவர் தனது பர்ஸை எடுத்தபோது, அந்த ஆட்டோ டிரைவர், " தேவையில்லை மேடம்... தயவு செய்து இந்த பணத்தை சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவதொரு வகையில் உதவ பயன்படுத்திக் கொள்ளுங்கள்,  நான் மிகவும் ஏழை... என்னால் இதற்கு மேல் உதவ முடியாது.


அல்லா அவர்களுக்கு உதவட்டும்...!" எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.


அந்த ஆட்டோ டிரைவர் கூறியதைக்கேட்டு சில நிமிடங்கள் பேச்சற்று நின்று போய்விட்டார்  ஷாலினி.


இந்த  விவரங்களை  ஷாலினி தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.