ஏர்வாடி ஆட்டோ டிரைவர் கொலை: கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்நெல்லை மாவட்டம் ஏர்வாடி 4–வது தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன் (வயது25). ஆட்டோ டிரைவரான இவர் இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 21–ந்தேதி இரவு ஒரு பெண்ணை ஆட்டோவில் ஏற்றி கொண்டு சவாரி சென்ற போது அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காஜாமைதீன் உடலை கைப்பற்றி பாளை ஆரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய கோரியும், காஜாமைதீன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரியும் அவரது உடலை வாங்க மறுத்தனர். மேலும் ஏர்வாடி பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி மற்றும் காஜாமைதீன் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் பின்னர் காஜாமைதீன் உடலை அவரது உறவினர்கள் நேற்று பெற்று கொண்டனர். அவரது உடலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏர்வாடிக்கு ஊர்வலமாக எடுத்து சென்று அங்குள்ள மையவாடியில் அடக்கம் செய்தனர்.

இதன் பின்னர் காஜாமைதீன் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், நாங்குநேரி துணை டி.எஸ்.பி. சண்முகம், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு காதர் பாட்சா, தாழையூத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் ஆகிய 5 பேர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர ரகசிய போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

காஜாமைதீனுடன் ஆட்டோவில் சென்ற பெண் உள்பட 5 பேரை பிடித்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரகசிய போலீசார் ஏர்வாடி ஆட்டோ டிரைவர்கள் ஒவ்வொருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் காஜாமைதீன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் நெல்லை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வள்ளியூர், நெல்லை உள்பட மாவட்டத்தின் முக்கிய ஊர்கள் அனைத்திலும் ரகசிய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்னும் சில நாட்களில் கொலையாளிகள் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.