சிங்கப்பூர் தேசிய கொடியை மேஜை விரிப்பாக்கிய இஸ்ரேல் தூதரகம்!சிங்கப்பூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில், மேஜை விரிப்பாக சிங்கப்பூர் தேசியக் கொடி பயன்படுத்தப்பட்டதையடுத்து, சிங்கப்பூர் அரசு கடும் கோபம் அடைந்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன் சிங்கப்பூர், இஸ்ரேல் தூதரகத்தில் சிறிய விருந்து நடந்துள்ளது. இந்த விருந்தின் போது, சிங்கப்பூர் தேசிய கொடியை மேஜை விரிப்பாக பயன்படுத்தியது தெரிய வந்தது. இது குறித்து மீடியாக்களில் செய்தி வெளியிடப்பட்டதும் சிங்கப்பூர் மக்கள் கொதித்தெழுந்தனர்.

போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்ரேல் தூதருக்கு சம்மனும் அனுப்பியது. இதையடுத்து தற்போது இஸ்ரேல் அரசு, சிங்கப்பூர் அரசிடம் 'இது வருந்தத்தக்க செயல்' என்று மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் அரசு உறுதி அளித்துள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில்,'' தேசியக்கொடியை அவமதிப்பது கடும் குற்றமாகும். எனினும் மன்னிப்பு வரவேற்கப்படுகிறது. அதே வேளையில் இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.