சென்னை வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றி தன் உயிரை ஈர்த்த இம்ரான் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி..!சென்னை திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் வசித்து வருபவர் ஜாபர். இவரது மகன் இம்ரான் (17). இவர் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

விடுமுறை நாட்களில் தனது தந்தையுடன் சேர்ந்து வீடு வீடாக தண்ணீர் கேன் போட்டு வந்துள்ளார்.
கடந்த 2ஆம் தேதி சென்னையில் பெய்த கனமழையால் நகரங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது.

இதில் தாங்கல் பகுதியும் தப்பவில்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இம்ரான் உள்ளிட்டவர்கள் களம் இறங்கினர். ஒவ்வொருவராக மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, மீட்பு பணியில் இருந்த இம்ரானை விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது. வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட இம்ரானை உடனடியாக அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், கை, கால்கள் செயல் இழந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் இம்ரான் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து நான்கு நாள் சிகிச்சைக்கு பின்னர், இம்ரான் உயிரிழந்தார்.தன்னுயிரையும் பணயம் வைத்து வெள்ள மீட்பில் ஈடுபட்ட மாணவன் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை கேள்வி பட்ட நடிகர் சிவகார்த்திகேயன் இம்ரானின் சகோதரியின் படிப்புச் செலவு முழுவதையும் கடைசி வரையிலும் தானே ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவியையும் வழங்கியிருக்கிறார்.

 

11046643_1722529407983817_386592036530532423_n12391166_1722529401317151_5187956684877877003_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.