சிங்கப்பூரில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக செல்போன் மூலம் வீடியோ எடுத்து ரசித்த இந்திய வம்சாவளி வாலிபர் கைதுமலேசியா நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான துரை குமரன் சுப்பிரமணியன்(31) என்பவர் சிங்கப்பூர் விமான நிலையத்தில் வேலைசெய்தபடி, இங்குள்ள ஒரு குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

தனது வீட்டை ஒட்டியுள்ள குளியலறைக்குள் கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி தனது செல்போனை ரெக்கார்டிங் நிலையில் ரகசியமாக ஒளித்து வைத்திருந்த துரை குமரன், அதன்பின்னர் உள்ளே சென்று குளித்த 25 வயது பெண்ணின் நிர்வாணத்தை தனது கைபேசியில் பார்த்து ரசித்துள்ளார்.

அதன்பின்னர், குளியலறைக்குள் சென்ற இன்னொரு இளம்பெண் குளிப்பதை ஜன்னல் வழியாக அவர் மறைந்திருந்து ரசித்ததை கண்ட அந்தப் பெண் கூச்சலிட்டார். இதுதொடர்பாக, போலீசில் அந்தப் பெண் புகார் அளித்தார். இதையடுத்து, துரை குமரனை கைது செய்த சிங்கப்பூர் போலீசார், அவரது செல்போனை வாங்கி ஆய்வுசெய்தபோது, பெண்கள் குளிக்கும் ஏராளமான காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

அவர்மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். அவருக்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என்ற நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட துரை குமரன், நடந்த தவறுக்காக வருந்துவதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, அவரை இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.