ஃப்ரான்ஸில் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையாளிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் !. படங்கள் இணைப்பு.சிறிது, சிறிதாக இஸ்லாத்தை நோக்கி வந்த மேலை நாட்டு மக்களை இவர்களின் இதுபோன்ற காட்டுமிராண்டித் தனங்கள் அதிக அளவிலான எண்ணிக்கையில் நுழைய வைத்து அதி வேகமாக இஸ்லாத்தை மேலைநாடுகளில் வளரச் செய்தது.

ஆம் !

எங்கெல்லாம் இஸ்லாமிய எதிர்ப்புகள் வலுக்கிறதோ, அங்கெல்லாம் இஸ்லாம் அதிவேகமாக வளர்ந்து வந்ததை கடந்த காலங்களில் கண்கூடாக காணவேச் செய்தோம்.

பிரான்ஸின் Corsica தீவில் உள்ள Ajaccio என்ற நகரில் தான் பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொழுகையை தொடங்கியதும் காட்டுமிராண்டிகளின் கூட்டம் பள்ளிக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன் புனித குர்ஆனின் பிரதிகளை கிழித்தும் துவம்சம் செய்துள்ளன.இது எங்கள் நாடு, இதை விட்டு வெளியேறு என்ற கோஷமும் எழுப்பி உள்ளனர்.

நாடு உங்களுடையதாக இருக்கலாம் ஆனால் இஸ்லாம் குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கோ, குறிப்பிட்ட ஒரு சமூகத்தாருக்கோ அருளப்பட்டதல்ல. மொத்த மனித குலத்துக்காகவும் இறக்கி அருளப்பட்டது தான் இஸ்லாம். என்பதை இவர்கள் தெரிந்துகொண்டால் இஸ்லாத்தை ஒடுக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட மாட்டார்கள்.

இவர்கள் வெறுத்தாலும் இவர்களை இஸ்லாம் அடைந்தே தீரும். இது இறைத்தூதரின் வாக்கு, இது நடந்தே தீரும்.

இரவு பகல் சென்றடையும் பிரதேசங்களையெல்லாம் இம்மார்க்கம் நிச்சயம் சென்றடையும். மதர், வஃபர் ( படித்த மக்கள்,படிக்காத மக்கள் வாழும்) ஆகிய எந்தப் பிரதேசத்தையும் இறைவன் விட்டு வைக்க மாட்டான். அவற்றிலும் இந்த தீனை அல்லாஹ் நுழைவிப்பான். கண்ணியமுடையவன் கண்ணியம் பெறுவான். இழிவானவன் இழிவடைவான். இஸ்லாத்தைக் கண்ணியப்படுத்துவதன் மூலம் ஒருவனுக்குக் கண்ணியமும் குஃப்ரை இழிவடையச் செய்வதன் மூலம் அடுத்தவனுக்கு இழிவும் ஏற்படும்.' (முஸ்னத் அஹ்மத், ஹாகிம்

அதனால் இதுபோன்ற கயவர்களின் கயமைத் தனத்தால் அப்பாவி முஸ்லீம்களைத் தான் தாக்க முடியும். இஸ்லாத்தை தடுக்க முடியாது. இது இறைதூதரின் வாக்கு நிகழ்ந்தே தீரும்.
இதுபோன்ற சம்பவங்களினால் முஸ்லிம்கள் விரக்தி அடையாமல் இருக்க அவர்களுக்காக துஆ செய்யுங்கள்.

அதிரை ஃபாரூக்.

 

q2

q1

q3
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.