ராஜ்நாத் சிங்கை ஊமையாக்கிய கேப்டன் மகளின் கேள்விவி.ஐ.பி. விமானங்கள் மட்டும் ஏன் விபத்தில் சிக்குவதில்லை?- ராஜ்நாத் சிங்கை ஊமையாக்கிய கேப்டன் மகளின் கேள்வி

டெல்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்புப் படைக்கு சொந்தமான விமானம் நேற்று காலை விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி இன்று காலை டெல்லி சப்தர்ஜங் விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் மத்திய அரசு சார்பில் கலந்துக்கொள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வந்தார்.

அப்போது விபத்தில் தனது தந்தையை இழந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் “ஏன் ஒவ்வொரு முறையும் போர்வீரனின் குடும்பம் அழ வேண்டும்? ஏன் வி.ஐ.பி. விமானங்கள் மட்டும் விபத்தில் சிக்குவது இல்லை? ஏன் இவர்களுக்கு (ராணுவ வீரர்களுக்கு) மட்டும் பழைய விமானங்கள் கொடுக்கப்படுகிறது? பதில் சொல்லுங்க சார், எனக்கு இப்பவே பதில் தெரிந்தாக வேண்டும். பதில் சொல்லுங்கள்.” என்று கேட்டார்.

இந்த கேள்விகளால் அதிர்ச்சியடைந்த ராஜ்நாத் சிங், பதில் பேச முடியாமல் மவுனமானார். ராஜ் நாத்திடம் கேள்வியெழுப்பிய சலோனி என்ற அந்த பெண் நேற்றைய விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்தர் குமாரின் மகள் ஆவார்.

நேற்று விபத்துகுள்ளான பி 200 என்ற அந்த விமானம் 22 ஆண்டுகள் பழமையானது. கடந்த 6 மாதத்திற்கு முன்னர் சர்வீஸ் செய்யப்பட்டது. மீண்டும் சர்வீஸ் செய்யப்படுவதற்கு 30 மணி நேரங்கள் பறக்க வேண்டும் என்ற நிலையில் நேற்று விபத்தில் சிக்கியது.

மேலும் நேற்று காலை விமானத்தின் என்ஜினை இயக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை கேப்டன் பகவதி பிரசாத் பட் கண்டுபிடித்துள்ளார். உடனே தரையில் உள்ள பி.எஸ்.எப். கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அது பெரிய தொழில்நுட்பக் கோளாறு இல்லை என்று கூறி தொடர்ந்து பறக்கும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் விபத்துகுள்ளான விமானம் பறக்கும் தகுதியுடன் தான் இருந்ததாக மத்திய இணை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இதே கருத்தை எல்லை பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல் டி.கே. பதக்கும் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.