முத்துப்பேட்டை அருகே மஞ்சள்காமாலைக்கு வாலிபர் சாவு.முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை தர்காவை சேர்ந்தவர் அருள்சாமி இவர் முத்துப்பேட்டை பேரூராட்சியில் தற்காலிகமாக பிளம்பர் வேலை பார்த்து வருகிறார்.

இவரது இரண்டாவது மகன் அந்தோணி(24) இவர் கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த ஒருமாதமாக உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முத்துப்பேட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அந்தோணிக்கு உடல்நிலை மோசமாகி வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து மீண்டும் தனியார் மருத்துவமனையில் காட்டியபோது இவருக்கு மஞ்சள் காமாலை இருப்பதாக டாக்டர் கூறியுள்ளார்.

இதனையடுத்து நேற்று காலை நாகை மாவட்டம் பறவையில் உள்ள புகழ் பெற்ற மஞ்சள்காமாலை சித்த மருத்துவத்திற்கு உறவினருடன் சென்றுகொண்டிருந்தார். பேருந்தில் போகும் போது உடல் நிலை மோசமானதால் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அந்தோனி பலனின்றி இறந்தார்.

நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.