பீப் சாங் பிரச்சினை…. சிம்பு அனிருத் மீது பாயும் வழக்குகள்..! வீடியோ இணைப்பு.சிம்பு - அனிருத் இணைந்து உருவாக்கியிருந்த பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிம்பு விரைவில் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வேகமாக பரவிவருகிறது. இதற்காக, கோவை போலீசார் சென்னை சென்றுள்ளனர். அவர்கள் சிம்புவிடம் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாடலில் பெண்கள் மிக மோசமான வார்த்தைகளால் குறிப்பிடப்படுகிறார்கள். இதற்கு தமிழ் நாட்டில் உள்ள பல பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட மாதர் சங்கத்தினர் அதன் தலைவி ராதிகா தலைமையில் திரண்டு கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கமிஷனரை சந்தித்து சிம்புவின் ஆபாச பாடல் குறித்து புகார் அளித்ததுடன் சிம்பு, அனிருத் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர். பின்னர் வெளியில் வந்த அவர்கள் சிம்பு, அனிருத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர், இருவர் படங்களையும் கிழித்து எறிந்து காலில் போட்டு மிதித்தனர். தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பட்டம் செய்தனர்.

மாதர் சங்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சமூக வளைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக கருத்து வெளியிடுதல், தவறான வார்த்தைகளை பிரயோகித்தல் ஆகியவற்றை கொண்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் இந்த வழக்கு சைபர் க்ரைம் பிரான்ஞ்சுக்கு மாற்றப்பட்டு்ள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.